பெயர் நீக்கம் எனும் யுத்தி!


ஆற்றலை வெளிபடுத்தும் பெண்களை அடக்க ஆண்கள் பயன்படுத்தும் உத்தி

நம்பர் ஒன்: மறுப்பும் மட்டம் தட்டலும்.

- டாக்டர் என். ஷாலினி

மறுப்பையும் மட்டந்தட்டலையும் மீறிச் சில பெண்கள் முன்னேறக்கூடுமே, அத்தகைய அடங்காப் பிடாரிகளை  அடக்குவதற்காகவே ஆண்கள் பயன்படுத்தும் அடுத்த  உத்தி தான் பெயர் நீக்கம்.

பெயர் நீக்கம் என்பது ஒரு தந்திரமான உத்தி....இதனால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில்  போட்டு மறைப்பது போல, ஒரு பெண்ணின் சாதனைகள் எல்லாவற்றையுமே அப்படியே மூடி  மறைத்து, இருந்த சுவடுகூடத் தெரியாமல் ஆக்கிவிட முடியும். ஆண்வழிச் சமூக மாற்றம்  வந்த காலம் தொட்டே, பல பெண்களை இந்த உத்தியைப் பின்பற்றி ஏதும் செய்யாதவர்களாக  ஆக்கியிருக்கிறார்கள் ஆண்கள்.

அந்தப் பெண்களின் வரிசையில் முதலில் வருபவர்  ஹட்செப்சுட். இவர் கி மு 1479 முதல் 1458 வரை எகிப்தை ஆண்ட பேரோ மஹாராணி ஹட்செப்சுட் முதலாம் துத்மொஸ் மன்னருக்கும் அவரது பட்டத்து மகிஷி அக்மோஸுக்கும்  பிறந்த மூத்த மகள். மன்னருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தாலும் அதில் இருவர் சிறு  வயதிலேயே இறந்துவிட்டபடியால், இளைய ராஜகுமாரர்களுக்கு ஆட்சியை ஏற்க, வயது  போதாது என்று, ஹட்செப்சுட் தன் தம்பி இரண்டாம் துத்மோஸை மணந்து, பட்ட மகிஷியாய்ப்  பொறுப்பேற்றுக்கொண்டாள்.

சில காலம் மட்டுமே ஆட்சி புரிந்துவிட்டு இரண்டாம் துத்மோஸும் இளம் வயதிலேயே  இறந்துபோய் விட, ஆட்சிப் பொறுப்பு அவனது மகன் மூன்றாம் துத்மோஸுக்கு போய்ச்  சேர்ந்தது.ஆனால் இந்த மூன்றாம் துத்மோஸ் இரண்டாம் தாரத்தின் மகன், அதிலும் மிகவும்   சின்ன வயதுதான். அதனால், ஆட்சிப் பொறுப்பை ஹட்செப்சுட்டே மேற்கொண்டு, மூடிசூடி  பேரோ மன்னரானாள். துத்மோஸ் அவளின் துணை வேந்தனாய் இருந்தான்.ஆனால் அவள்  வாழ் நாள் முழுக்க அதிகாரம் எல்லாமே ஹட்செப்சுட்டிடமே இருந்தது. மன்னரின் முண்டாசு,  பாரம்பரிய ஒட்டு தாடி, ஷெண்டைட் ஆடை என்று சகல அந்தஸ்து அணிகலன்களையும்  அவளே உபயோகித்து, அரசு நிகழ்ச்சிகளைத் தலைமை தாங்கி நடத்தினாள்.

ஒரு பெண் பேரோ ஆவது எகிப்துக்குப் புதிது அல்ல, ஹட்ஷெப்சுட்டுக்கு முன்பே, நிமேதாப்,  சொபெக்னெஃபெரு, அஹொடெப் போன்ற பெண்கள் ஆண்ட வரலாறு எகிப்துக்கு உண்டு,  என்ன ஒரே வித்தியாசம், அவர்கள் எல்லாம் குறைந்த காலமே ஆட்சி செய்தார்கள்,  ஹட்ஷெப்சுட்டோ மொத்தம் இருபத்திரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்தாள். அதுவும்  தடபுடலாய் பல சாதனைகளோடு!

அவள் மிக நுட்பமாய், துத்மோஸை படைத்தலைவனாக்கி, அண்டை நாடுகளுடன் போர்புரிய  அனுப்பி பண்ட்டு, பிப்லோஸ், சினாய், நூபியா, லிவந்த்து, சிரியா ஆகிய தேசங்களை  வென்றாள். ஆரம்பத்தில் போரில் அக்கறை காட்டினாலும் பிறகு அண்டை நாடுகளுடன் சுமூக  உறவை ஏற்படுத்திக்கொண்டு, வணிகத்தை வளர்த்து எகிப்தை ஒரு வளமான, வலிமையான  நாடாக்கினாள்.

அவள்து நீண்ட, நிறைவான ஆட்சியில் பல பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டுவித்தாள்.  அவள் காலத்தில் அவை நிகரே இல்லாத பெரும் சாதனைகளாக போற்றப்பட்டன.
எகிப்தியரின் போர் தெய்வமான மட் எனும் பெண் கடவுளின் பழைய கோவிலைப் புதுப்பித்து,  வாசலில் இரண்டு நெடும் ஆபலிஸ்க் தூண்களை எழுப்பினாள். இவை அவள் காலத்தின் மிக  உயரிய தூண்களாக வியப்பை கிளப்பினவாம்.

கார்னாக் எனும் இடத்தில் சிகப்புக் கோயில் என்ற ஒன்றையும் கட்டுவித்தாள் ஹட்ஷெப்சுட்.  இன்னொரு பெண் போர் தெய்வமான பாகெட்டுக்கு பெனி ஹசன் என்ற இடத்தில் நயில்  நதிக்கரையோரப் பாறைகளைக் குடைந்து பிரம்மாண்டமான் கற்கோவிலைக் கட்டினாள்.  இதைப் பிற்காலத்தில் எகிப்தை ஆண்ட கிரேக்க மன்னர்கள் கூட கண்டு வியந்தார்களாம்.
இதை எல்லாவற்றையும் விட அழகானது டேய்ர் எல் பாஹ்ரியில் கட்டப்பட்ட  ஹட்ஷெப்சுட்டின் சமாதி கோவில். வரிசை வரிசையாய்த் தூண்கள், அடுக்கடுக்காக ஒன்றின்  மேல் இன்னொன்றாய் நிமிர, அதன் உச்சியில் பசுமையான பெரிய தோட்டம்! இதெல்லாம்  கிரேக்க காலத்திற்கு ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பே!

இவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்து, தன் கடைசிக் காலம் வரை பேரோவாகவே இருந்து  இறந்து போனாள் ஹட்ஷெப்சுட். அவளுக்குப் பிறகு மூன்றாம் துத்மோஸுக்கு ஆட்சிப்  பொறுப்பு போய்ச் சேர, அவன் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் மிகச் சிறப்பாக எகிப்தை  ஆண்டான். அவனது கடைசிக் காலத்தில் அவன் மகன் இரண்டாம் அமென்ஹோடெப்ஹ்  அவனோடு கூட்டாட்சி புரிந்தான்.

இந்த இரண்டாம் அமென்ஹோடெப்பிற்குத் தன் பிரபலமான பாட்டியின் நிழலில் இருக்கப்  பிடிக்காமலோ என்னவோ, அவன் ஹட்ஷெப்சுட்டின் எல்லாச் சுவடுகளையும் அழிக்க  உத்தரவிட்டான். அதன் படி அவளது சிலைகள், சிற்பங்கள் கொத்தி எடுக்கப்பட்டன. அவள்  சம்மந்தப்பட்ட ஆவணங்கள் எல்லாவறிலுமிருந்து அவள் பெயர் நீக்கப்பட்டது.

ஹட்ஷெப்சுட்டுக்காக டெர் எல் பாஹ்ரியில் கட்டப்பட்ட கோவில்களிலிருந்து அவள் சிலைகள்  நாசம் செய்யப்பட்டன. அவள் கட்டிய ஒபிலிஸ்க்கள் சுவர்களால் மறைக்கப்பட்டன. ஆக  ஒட்டுமொத்தமாய் இரண்டாம் அமென்ஹோடெப் ஹட்ஷெப்சுட்டின் எல்லாச் சுவடுகளையும்  அழித்துவிட முயன்றான். அவள் சரித்திரத்தை மறைக்க முயன்றான்.

வேலை மெனக்கெட்டு ஒரு மனிதன் அதைச் செய்ய என்ன காரணம் இருக்க முடியும்?  அதுவும் ஏன் குறிப்பாக ஹட்ஷெப்சுட்டின் பெயரை மட்டும் நீக்குவதில் இத்தனை மும்முரம்  காட்ட வேண்டிய அவசியம் என்ன? அவள் செய்த தவறு என்ன? பெண்ணாக இருந்தும்  ஆணின் உயர் அந்தஸ்த்தை வகித்து, அதிலும் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து புகழ்  பெற்றதினாலா? விட்டால் இவள் மற்ற பெண்களுக்கு ஒரு முன் மாதிரி ஆகிவிடுவாள், பிறகு  ஆண் பெயர் நீக்கம் எனும் யுத்தி!.

ஒரு பெண் பேரோ ஆவது எகிப்துக்குப் புதிது அல்ல, ஹட்ஷெப்சுட்டுக்கு முன்பே, நிமேதாப்,  சொபெக்னெஃபெரு, அஹொடெப் போன்ற பெண்கள் ஆண்ட வரலாறு எகிப்துக்கு உண்டு,  என்ன ஒரே வித்தியாசம், அவர்கள் எல்லாம் குறைந்த காலமே ஆட்சி செய்தார்கள்,  ஹட்ஷெப்சுட்டோ மொத்தம் இருபத்திரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்தாள். அதுவும்  தடபுடலாய் பல சாதனைகளோடு!

அவள் மிக நுட்பமாய், துத்மோஸை படைத்தலைவனாக்கி, அண்டை நாடுகளுடன் போர்புரிய  அனுப்பி பண்ட்டு, பிப்லோஸ், சினாய், நூபியா, லிவந்த்து, சிரியா ஆகிய தேசங்களை  வென்றாள். ஆரம்பத்தில் போரில் அக்கறை காட்டினாலும் பிறகு அண்டை நாடுகளுடன் சுமூக  உறவை ஏற்படுத்திக்கொண்டு, வணிகத்தை வளர்த்து எகிப்தை ஒரு வளமான, வலிமையான  நாடாக்கினாள்.

அவள்து நீண்ட, நிறைவான ஆட்சியில் பல பிரம்மாண்டமான கட்டிடங்களை கட்டுவித்தாள்.  அவள் காலத்தில் அவை நிகரே இல்லாத பெரும் சாதனைகளாக போற்றப்பட்டன.
எகிப்தியரின் போர் தெய்வமான மட் எனும் பெண் கடவுளின் பழய கோவிலை புதுபித்து,  வாசலில் இரண்டு நெடும் ஆபலிஸ்க் தூண்களை எழுப்பினாள். இவை அவள் கால உலகத்தின்  மிக உயரிய தூண்களாக வியப்பைத் தந்தனவாம்.

கார்னாக் எனும் இடத்தில் சிகப்பு கோயில் என்ற ஒன்றையும் கட்டுவித்தாள் ஹட்ஷெப்சுட்.  இன்னொரு பெண் போர் தெய்வமான பாகெட்டுக்கு பெனி ஹசன் என்ற இடத்தில் நயில்  நதிக்கரையோர பாறைகளை குடைந்து பிரம்மாண்டமான் ஹ்கற்கோவிலை கட்டினாள். இதை  பிற்காலத்தில் எகிப்தை ஆண்ட கிரேக்க மன்னர்கள் கூட கண்டு வியந்தார்களாம்.

இதை எல்லாம் விட அழகாந்து டேய்ர் எல் பாஹ்ரியில் கட்டப்பட்ட ஹட்ஷெப்சுட்டின் சமாதி  கோவில். வரிசை வரிசையாய் தூண்கள் அடுக்கடுக்காக ஒன்றின் மேல் இன்னொன்ராய் நிமிர,  அதன் உச்சியில் பசுமையான பெரிய தோட்டம்! இதெல்லாம் கிரேக்க காலத்த்ற்கு ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே! இவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்து, தன் கடைசி காலம் வரை  பேரோவாகவே இருந்து இறந்து போனாள் ஹட்ஷெப்சுட்.

அவளுக்கு பிறகு மூன்றாம் துத்மோஸுக்கு ஆட்சி பொறுப்பு போய்சேர, அவன் கிட்ட்த்தட்ட  முப்பது ஆண்டுகள் மிக சிறப்பாக எகிப்த்தை ஆண்டான். அவனது கடைசி காலத்தில் அவன்  மகன் இரண்டாம் அமென்ஹோடெப்ஹ் அவனோடு கூட்டாட்சி புரிந்தான்.

இந்த இரண்டாம் அமென்ஹோடெப்பிற்கு தன் பிரபளமான பாட்டியின் நிழலில் இருக்க  பிடிக்காமலோ என்னவோ, அவன் ஹட்ஷெப்சுட்டின் எல்லா சுவடிகளையும் அழிக்க  உத்தரவிட்டான். அதன் படி அவளது சிலைகள், சிற்பங்கள் கொத்தி எடுக்கப்பட்டன. அவள்  சம்மந்தப்பட்ட ஆவணங்கள் எல்லாவறிலுமிருந்தும் அவள் பெயர் நீக்கப்பட்டது.

ஹட்ஷெப்சுட்டுக்காக டெர் எல் பாஹ்ரியில் கட்டப்பட்ட கோவில்களிலிருந்து அவள் சிலைகள்  நாசம் செய்யப்பட்டன. அவள் கட்டிய ஒபிலிஸ்க்கள் சுவர்களால் மறைக்கப்பட்டன. ஆக  ஒட்டுமொத்தமாய் இரண்டாம் அமென்ஹோடெப் ஹட்ஷெப்சுட்டின் எல்லாச் சுவடுகளையும்  அழித்துவிட முயன்றான். அவள் சரித்திரத்தை மறைக்க முயன்றான்.

வேலை மெனக்கெட்டு ஒரு மனிதன் அதை செய்ய என்ன காரணம் இருக்க முடியும்? அதுவும்  ஏன் குறிப்பாக ஹட்ஷெப்சுட்டின் பெயரை மட்டும் நீக்குவதில் இத்தனை மும்முரம் காட்ட  வேண்டிய அவசியம் என்ன? அவள் செய்த தவறு என்ன? பெண்ணாக இருந்தும் ஆணின் உயர்  அந்தஸ்த்தை வகித்து, அதிலும் மிக சிறப்பாக ஆட்சி புரிந்து புகழ் பெற்றதினாலா? விட்டால்  இவள் மற்ற பெண்களுக்கு ஒரு முன் மாதிரி ஆகிவிடுவாள், பிறகு ஆண் பேரோக்களுக்கே  அவசியம் இல்லாமல் போய்விடும் என்ற ஆத்திரத்தாலா?

இந்தப் பெயர் நீக்கம் என்கின்ற யுத்திக்கு ஆளான பெண்களின் வரிசையில் ஹட்ஷெப்சுட்  மட்டும் தனி மனிஷி இல்லை. பெண்களை பெயர் தெரியாமல் நீக்கி, இருந்த சுவடில்லாமல்  சரித்திரத்தை மாற்றிவிடும் இந்த முயற்சிக்கு பலியான் பெண்கள் பலர். அவர்களைப் பற்றி அடுத்த தோழியில்

 மைண்ட்ஃபோக்கஸ்' என்ற உளநலவியல் மையத்தை நடத்திவருகிறார். psrfindia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் டாக்டர் ஷாலினியைத் தொடர்புகொள்ளலாம்

 

இதன் தொடர்ச்சி அடுத்த தோழியில்.

 

Could not connect to MySQL